தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு


தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அய்யா வைகுண்டர் பிறந்த நாளையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா வருகிற 4-3-2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொது தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகளில் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 11-3-2023 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story