மார்கழி மாத பஜனை


மார்கழி மாத பஜனை
x

மேலச்செவலில் மார்கழி மாத பஜனை நடைபெற்றது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

மேலச்செவல் ஆதித்தவர்னேஸ்வரர் சவுந்தரி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் பேரவை சார்பில், மார்கழி மாத பஜனை விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் அனைத்து பக்தர்கள் பேரவை சார்பில் தினமும் பஜனை விழா நடைபெற்று வருகிறது.

மேலச்செவல் பேரூராட்சி தலைவர் அன்னபூரணி ராஜன் ஏற்பாட்டில், பஜனை குழுவினர் கோவிலின் நான்கு ரத வீதிகளையும் சுற்றி, பஜனை பாடல் பாடி, கோவிலின் முன்பு நிறைவு செய்கின்றனா். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்படுகிறது. இதில் பஜனை குழுவினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story