மாரியம்மன் கோவில் ஆனித்திருவிழா


மாரியம்மன் கோவில் ஆனித்திருவிழா
x

மாரியம்மன் கோவில் ஆனித்திருவிழா நடைபெற்றது.

கரூர்

பள்ளப்பட்டி அருகே வேலம்பாடி ஊராட்சி சவுந்திராபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல், மா விளக்கு எடுத்து வந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கம்பத்தையன் அரிவாள் மீது ஏறி பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சித்தலைவர் ராணி கணேசன், ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story