பேரணிமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


பேரணிமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:45 PM GMT)

பேரணி மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடு போனது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

திண்டிவனம் தாலுகாவுக்கு உட்பட்ட பேரணி ரெயில்வே கேட் அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ளே மற்றும் வெளியே வைக்கப்பட்டு இருந்த உண்டியலை நேற்று முன்தினம் மர்ம மனிதர்கள் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்று விட்டனர். ரூ.2 ஆயிரம் வரைக்கும் பணம் இருந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story