மாரியம்மன் கோவில் தேர் திருவிழா


மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:48 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜீவா கொளஞ்சியப்பன், வைத்தியநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் சரோஜா, ராஜா, வக்கீல் பாலஅண்ணாமலை, ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் பச்சமுத்து, சூர்யா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பூவராகவன், கார்த்திகேயன் மற்றும் ஆறுமுகம், முருகன், பன்னீர்செல்வம் சிங்காரவேல், செல்வம், மாயவன், ராகவன், ராஜாராம், பிரகாஷ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சிகளான ஆகஸ்டு மாதம் மாதம் 11-ந் தேதி ஊரணி பொங்கலும், 12 மற்றும் 13-ந் தேதிகளில் தேரோட்டமும், 14-ந் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.


Next Story