மாரியம்மன் கோவில் திருவிழா


மாரியம்மன் கோவில் திருவிழா
x

கோத்தகிரி அருகே மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள ஓரசோலை அண்ணா நகர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது.


விழாவின் முக்கிய நாளான நேற்று காலை பாண்டியன் பூங்கா பகுதியில் பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி மற்றும் பறவை காவடி ஏந்தியும் ஊர்வலமாக அண்ணாநகர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யபட்டு, அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story