மாரியம்மன் கோவில் திருவிழா


மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவில் திருவிழா

கோயம்புத்தூர்

நெகமம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவலப்பம்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி இரவு சக்திக்கும்பம் எடுத்து, கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொண்டே கவுண்டன் பாளையத்தில் இருந்து எடுத்துச்சென்று ஆவலப்பம்பட்டி மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டது.

கம்பம் நட்ட பிறகு தினமும் இரவு கோவிலை சுற்றி பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு எடுத்தல், நேற்று அதிகாலை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story