மாரியம்மன் கோவில் தேரோட்டம்


மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

இளம்பிள்ளை சந்தைபேட்டையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

சேலம்

இளம்பிள்ளை

இளம்பிள்ளை சந்தைபேட்டையில் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மாரியம்மன், காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து உருளு தண்டம், ரத ஊர்வலம், பகவதி அம்மன் அழைப்பு, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.

தேர் இளம்பிள்ளை தியேட்டர் ரோடு, சேலம் மெயின்ரோடு, சவுண்டம்மன் கோவில் ரோடு வழியாக இளம்பிள்ளை நகரை சுற்றி கோவிலை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய், பழம், பூ, உப்பு வைத்து சாமியை வழிபட்டனர்.


Next Story