மாரியம்மன் கோவில் நிலைத்தேர்த்திருவிழா


மாரியம்மன் கோவில் நிலைத்தேர்த்திருவிழா
x

மாரியம்மன் கோவில் நிலைத்தேர்த்திருவிழா நடந்தது.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட வெங்கனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 15-ந் தேதி காப்புக்கட்டி கொடியேற்றப்பட்டது. அதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாரியம்மன் மயில் வாகனம், காளை வாகனம், குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், கரகம் எடுத்து அக்னிசட்டி ஏந்தியும் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்ற பக்தர்கள் மீண்டும் கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதையடுத்து நிலைத்தேர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு அதில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அரிச்சந்திரா நாடகம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சன்னாவூர், கோவில்எசனை, கரைவெட்டி போன்ற பல்வேறு கிராம இளைஞர்களும், பொதுமக்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று(சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story