சித்தேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
சித்தேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
சேலம்
தலைவாசல்,
தலைவாசல் அருகே சித்தேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தியும், பூங்கரகம், அக்னி கரகம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து ஆடு, கோழி பலியிட்டு வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவில் நல்லதம்பி எம்.எல்.ஏ., தலைவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் மணி என்கிற பழனிசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story