ஆட்டோ டிரைவர் சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியல்
மானாமதுரை அருகே ஆட்டோ டிரைவர் சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே ஆட்டோ டிரைவர் சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
ஆட்டோ டிரைவர்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது43). ஆட்டோ டிரைவான இவர் நேற்றுமுன்தினம் இரவு மானாமதுரையில் வேலையை முடித்துவிட்டு ஆட்டோவில் மிளகனூர் வீட்டிற்கு சென்று உள்ளார். போகும் வழியில் பீசர்பட்டிணம் என்ற இடத்தில் உள்ள வயல்வெளி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பன்றிக்கு வைக்கப்பட்டு இருந்த மின்வேலியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
ஆட்டோவில் ஊருக்கு சென்றவர் ஆட்டோவை செல்லும் வழியில் மரத்தின் அருகே நிறுத்தி விட்டு வயல்வெளிக்கு சென்றது ஏன் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர். இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் செந்தில்முருகன் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தள்ளுமுள்ளு
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மானாமதுரை தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜாமணி, யூனியன் துணைச் துணை சேர்மன் முத்துசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதால் போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்றுக்கொண்டனர்.