மாரியம்மன், கெங்கையம்மன் திருவிழா


மாரியம்மன், கெங்கையம்மன் திருவிழா
x

குடியாத்தம் மாரியம்மன், கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் காட்பாடி ரோடு ராஜகோபால் நகரில் 29-ம் ஆண்டு மாரியம்மன், கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. கெங்கையம்மன் சிரசு மற்றும் பூங்கரகம் முக்கிய பகுதிகள் வழியாக வீதிஉலா வந்தது. தொடர்ந்து கெங்கையம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அருண்முரளி, ஒன்றியக்குழு உறுப்பினர் இமகிரிபாபு, ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி, உபயதாரர் சி.ரமேஷ், தொழிலதிபர்கள் கே.கிரிதரன், எஸ்.சந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் டி.கமல்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் எல்.வெங்கடேசன், ஏ.தணிகைவேல், டி.ஜி.பரந்தாமன், ஏ.கருணாநிதி, எம்.தினகரன், நடராஜ், மணிகண்டன், சுரேஷ்குமார் உள்பட விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story