மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கருமத்தம்பட்டியில் மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கருமத்தம்பட்டி
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஊர் பொதுமக்கள் புனர மைத்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 25-ந் தேதி இந்த கோவில்க ளின் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தினசரி வேள்வி மற்றும் யாகசாலை பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
மேலும் பல்வேறு புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டது.
நேற்று காலை சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் சவுந்தரராஜ பட்டாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில் கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிேஷகம் நடைபெற்ற போது கோபுரத்துக்கு அருகே கருடன் வந்ததால் பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து வழிபட்ட னர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர். விழா ஏற்பாடுகளை கருமத்தம்பட்டி மற்றும் கருமத்தம் பட்டிபுதூர் மக்கள் செய்திருந்தனர்.