மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள பரனூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கோபாலகிருஷ்ணர் மற்றும் பரிவார மூர்த்திகள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி 27-ந் தேதி கணபதி பூஜை, முதல் கால யாக பூஜை, 2-ம் கால யாக பூஜை, 3-ம் கால் யாக பூஜை நடைபெற்று, தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. அப்போது பக்தர்களின் பக்த கோஷங்கள் முழங்க கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story