ரூ.3 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்க மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு


ரூ.3 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்க மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
x

எட்டயபுரத்தில் ரூ.3 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்க மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் ரூ.3 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்யும் பணி நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவநீத கண்ணன், தூத்துக்குடி மாவட்ட வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், சங்கரபாண்டியன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் மணிகண்டன், எட்டயபுர கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அதனை தொடர்ந்து விளாத்திகுளத்தில் ரூ.9 லட்சத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர் நிறுத்தும் நிலையம் புதுப்பிக்கும் பணியை எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் கோவில் பொறியாளர்கள், கோவில் நிர்வாக அதிகாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story