பொதுமக்களிடம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. குறை கேட்பு


பொதுமக்களிடம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. குறை கேட்பு
x

விளாத்திகுளம் அருகே பொதுமக்களிடம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஊராட்சிகள் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.

கூட்டத்தில் விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story