புதன்சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பு காளை மாடு ரூ.33 ஆயிரத்துக்கு விற்பனை
புதன்சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பு காளை மாடு ரூ.33 ஆயிரத்துக்கு விற்பனை
நாமக்கல்
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள புதன்சந்தை நேற்று வழக்கம்போல் கூடியது. சந்தைக்கு நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் கொல்லிமலை பகுதிகளில் இருந்து அதிகளவில் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் கடந்த வாரம் ரூ.25 ஆயிரத்திற்கு விற்ற எருமை மாடு இந்த வாரம் ரூ.26 ஆயிரத்திற்கு விற்பனையானது. பசு மாடுகள் ரூ.20 ஆயிரத்திற்கும், கன்றுகுட்டிகள் ரூ.10 ஆயிரத்திற்கும் விற்பனை ஆனது.
காளை மாடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த வாரம் ரூ.30 ஆயிரத்திற்கு விற்ற காளை மாடு இந்த வாரம் ரூ.3 ஆயிரம் அதிகமாக ரூ.33 ஆயிரத்திற்கு விற்பனையானது.
Related Tags :
Next Story