ரூ.200-க்கு காய்கறி வாங்கினால் தேங்காய், ஒரு கிலோ தக்காளி இலவசம்


ரூ.200-க்கு காய்கறி வாங்கினால் தேங்காய், ஒரு கிலோ தக்காளி இலவசம்
x

ரூ.200-க்கு காய்கறி வாங்கினால் தேங்காய், ஒரு கிலோ தக்காளி இலவசம் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சிங்கம்புணரி பெரிய கடை வீதி சாலை ஓரங்களில் போட்டு வியாபாரம் செய்து வந்தனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிங்கம்புணரியில் பல ஆண்டுகளாக பூட்டி கிடந்த உழவர் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டுவர சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் நடவடிக்கை ேமற்கொண்டு தற்போது சந்தை புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இதையொட்டி உழவர் சந்தையில் வந்து குறைந்த பட்சம் 200 ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கும் பொதுமக்களுக்கு ஒரு தேங்காய் மற்றும் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்குவதாக விவசாயிகள், வியாபாரிகள் அறிவித்துள்ளனர். வருகிற 15-ந் தேதி வரை இந்த நடைமுறை இருக்கும் என உழவர் சந்தை மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.



Next Story