கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.38 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்; பழனி முருகன் கோவில் நிர்வாகம் கொள்முதல்


கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.38 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்; பழனி முருகன் கோவில் நிர்வாகம் கொள்முதல்
x

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.38 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரையை பழனி முருகன் கோவில் நிர்வாகம் ஏலம் எடுத்தது.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.38 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரையை பழனி முருகன் கோவில் நிர்வாகம் ஏலம் எடுத்தது.

நாட்டு சர்க்கரை

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 186 மூட்டைகளில் நாட்டு சர்க்கரை கொண்டு வந்திருந்தனர்.

இதில் 60 கிலோ மூட்டை முதல் தர திடம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 710 ரூபாய்க்கும், 2-ம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 420 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 550 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,496 மூட்டைகளில் நாட்டுச்சர்க்கரை 38 லட்சத்து 4 ஆயிரத்து 40 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

உருண்டை வெல்லம்

மேலும் 80 மூட்டைகளில் 2 ஆயிரத்து 400 கிலோ எடையுள்ள உருண்டை வெல்லம் கொண்டு வரப்பட்டன. இதில் 30 கிலோ சிப்பம் முதல் தரம் 1,500 ரூபாய் என மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

மொத்தமாக நாட்டுச்சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை 39 லட்சத்து 24 ஆயிரத்து 40 ரூபாய்க்கு பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகம் சார்பாக கொள்முதல் செய்ததாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


Next Story