பரமத்திவேலூரில் 4-ந் தேதி வாரச்சந்தை நடைபெறும்


பரமத்திவேலூரில் 4-ந் தேதி வாரச்சந்தை நடைபெறும்
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூரில்4-ந் தேதி வாரச்சந்தை நடைபெறும்பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தைக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதேபோல் மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமையில் நாட்டுக்கோழி சந்தையும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை தைப்பூச திருவிழா நடக்கிறது. இதனால் வாரச்சந்தையை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) வாரச்சந்தையும், நாட்டுக்கோழி சந்தையும் நடைபெறும் என்று பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story