திருப்போரூரில் பழ வியாபாரி மர்மச்சாவு


திருப்போரூரில் பழ வியாபாரி மர்மச்சாவு
x

திருப்போரூரில் பழ வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 31). இவருக்கு ஷகிலா என்ற மனைவியும், தமிழரசன் என்ற மகனும், வைஷ்ணவி என்ற மகளும் உள்ளனர். ஈஸ்வரன் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற இடங்களில் மொத்த விலைக்கு பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தற்காலிகமாக பழக்கடை அமைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அவர் திருப்போரூர் மின் வாரிய அலுவலகம் எதிரே புதர் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அவரது உடலில் காயங்களோ, விஷ பூச்சிகள் கடித்ததற்கான அடையாளங்களோ இல்லை. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஈஸ்வரன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story