விவசாய பணிக்கு வந்த வடமாநில தொழிலாளி மர்மச்சாவு
நெமிலி அருகே விவசாய பணிக்கு வந்த வடமாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி, பனப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நெல்நாற்று நடவு பணிக்காக வடமாநில தொழிலாளர்கள் வந்துள்ளனர். நெமிலி அருகே ஆட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான நிலம் சயனபுரம் கிராமத்தில் உள்ளது. இங்கு நெல்நாற்று நடவு பணிக்காக 13 வடமாநில தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு தனக்கு சொந்தமான விவசாய கொட்டகையில் தங்கவைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவை சேர்ந்த தினு ஹிம் ராம் (வயது 40) என்பவர் விவசாய கொட்டகையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story