சலூன் கடை ஊழியர் மர்மசாவு
சலூன் கடை ஊழியர் மர்ம முறையில் இறந்தார்.
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை அருகே கொத்தகம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் சத்திய செல்வன் (வயது 35). இவர், தஞ்சாவூரில் சலூன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கந்தர்வகோட்டை தஞ்சை சாலையில் டாஸ்மாக் கடைக்கு அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சத்திய செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அளவுக்கு அதிகமான மது போதையில் தவறி குப்புற விழுந்ததில் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story