காற்றாலை நிறுவன ஊழியர் மர்மசாவு
சங்கரன்கோவில் அருகே காற்றாலை நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீராணத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சவுந்தரபாண்டி என்ற சுபாஷ் (வயது 24). இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள மின் உற்பத்தி செய்யும் தனியார் காற்றாலை நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை சுபாஷ் சங்கரன்கோவில் அருகே உள்ள சர்க்கரை குளத்தில் இருந்து பெரியசாமியாபுரம் செல்லும் சாலையில் உடலில் காயங்களுடன் கிடந்தர்.
அப்போது அந்த வழியாக சென்ற உடன் வேலை பார்க்கும் நண்பர்கள், சுபாஷை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுபாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் சுபாஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இறந்தவுடன் உடனடியாக தகவல் கூறாமல் தாமதமாக தெரிவித்ததாகவும், உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி நேற்று சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.