மோகனூர் அருகே திருமணம் முடிந்து மாட்டு வண்டியில் சென்ற மணமக்கள்
மோகனூர் அருகே திருமணம் முடிந்து மாட்டு வண்டியில் சென்ற மணமக்கள்
நாமக்கல்
மோகனூர்:
மோகனூர் அருகே ராசிபாளையம் ஊராட்சி மாமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ராசா முருகேசன்- மோகனாம்பாள் தம்பதியரின் மகன் அஜித்குமார். இவர் லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டியை சேர்ந்த பாலன்- செல்வராணி தம்பதி மகள் கவுதமிக்கும் சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் மாட்டு வண்டியில் கோவிலில் இருந்து மோகனூர் வழியாக மணமகன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மாட்டு வண்டியில் சென்ற புதுமண தம்பதியை சாலைகளில் சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், திருமணங்களில் தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கில் திருமணம் முடிந்ததும் மாட்டு வண்டியில் சென்றோம் என்றனர்.
Related Tags :
Next Story