இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம்-கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம்-கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம், கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

இலவச திருமணம்

தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 8 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா தர்மபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கவுதமன், சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார் வரவேற்று பேசினார்.

விழாவில் கலெக்டர் சாந்தி திருமாங்கல்யம் எடுத்து கொடுத்து 8 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமணத்தையொட்டி. மணப்பெண்ணுக்கு 4 கிராம் தங்க தாலியும், சுப முகூர்த்த பட்டுப்புடவை, ரவிக்கை, மணமகனுக்கு பட்டு ஜரிகை வேட்டி, பட்டு ஜரிகை துண்டு, பட்டு சட்டை, சுப முகூர்த்த பொருட்கள் மற்றும் மணமக்களுக்கு கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டன.

சீர் வரிசைகள்

மேலும் மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மிக்சி, பீரோ, கட்டில், மெத்தை, பாய், பித்தளை குத்துவிளக்கு, எவர் சில்வர் குடம் உள்ளிட்ட 20 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு திருமண உணவு வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அன்பழகன், துரை, குப்பன், மாலா திருவேங்கடம், கோவில் ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story