256 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம்


256 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம்
x

நெமிலி ஒன்றியத்தில் 256 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

நெமிலி ஒன்றியத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி தொகை வழங்கும் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திருமண உதவித் தொகை வழங்கும் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் விழா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு தலைமை தாங்கி, 256 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், மாவட்ட சமூகநல அலுவலர் இந்திரா, ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர்கள் மலர்விழி, ஆனந்தஜோதி, அபர்ணா, ஊராட்சி ஒன்றிய சமூகநல அலுவலர்கள் விஜயா, பூங்கொடி, ஜீவகாந்தி மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.


Next Story