கல்லூரி மாணவியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்
மேட்டுப்பாளையத்தில் 17 வயது கல்லூரி மாணவியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த 2 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் 17 வயது கல்லூரி மாணவியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த 2 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
17 வயது மாணவி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவியின் வீட்டில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது அங்கு பந்தல் வேலைக்கு வந்த மேட்டுப்பாளையம் வ.உ.சி. முதல் வீதியை சேர்ந்த விஜய் (வயது 25) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து 2 பேரும் பழகி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது. அப்போது, விஜய் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்ததாக தெரிகிறது.
பாலியல் பலாத்காரம்
பின்னர் மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி தாலியை மறைத்து வைத்துக்கொண்டு வழக்கம்போல கல்லூரிக்கு சென்றுவந்தார். இதற்கிடையில் விஜய் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் விஜய்க்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் இருப்பது மாணவிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்த விஜய் மீது மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போக்சோவில் கைது
இந்த புகாரின் பேரில் போலீசார் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா விசாரணை நடத்தி, மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்த விஜய்யை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.