திருமணம் செய்ய மறுத்த காதலிக்கு கத்திக்குத்து


திருமணம் செய்ய மறுத்த காதலிக்கு கத்திக்குத்து
x

திருமணம் செய்ய வீட்டைவிட்டு வர மறுத்ததால் காதலியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம்

பனைக்குளம், ந

திருமணம் செய்ய வீட்டைவிட்டு வர மறுத்ததால் காதலியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மண்டபம் முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் வசித்து வரும் முகமது சாதிக்கின் மகள் சல்மியா பானு(வயது 26). இவர் மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏ.கே.எஸ். என்ற தோப்பை சேர்ந்த காசி விக்னேசுவரனை காதலித்து வந்துள்ளார்.இதைத்தொடர்ந்து விக்னேசுவரன், முகமது சாதிக்கிடம் சல்மியா பானுவை பதிவு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அப்போது இருவீட்டாரும் கலந்துபேசி முடிவு செய்வோம் என்று கூறி அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சல்மியா பானுவிடம் தொலைபேசியில் பேசி வீட்டை விட்டு வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் வர விருப்பம் இல்லை என மறுத்து விட்டார். இந்த நிலையில் சல்மியா பானுவிடம் ஆத்திரமடைந்த விக்னேசுவரன் அவரது வீட்டிற்கு நேரில் சென்று தகராறு செய்தார். மேலும் கத்தியால் சல்மியா பானுவை குத்திவிட்டு அவரது தாய், தந்தைக்கு கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடி விட்டார்.

வழக்குப்பதிவு

இதில் காயம் அடைந்த சல்மியாபானு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விக்னேசுவரனை தேடி வருகின்றனர்.


Next Story