தியாகிகள் தினம்: சென்னையில் போக்குவரத்து சிக்னல்களை நிறுத்தி 2 நிமிடம் அஞ்சலி


தியாகிகள் தினம்: சென்னையில் போக்குவரத்து சிக்னல்களை நிறுத்தி 2 நிமிடம் அஞ்சலி
x

தியாகிகள் தினத்தையொட்டி நேற்று சென்னையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை 2 நிமிடம் ஒரே நேரத்தில் நிறுத்தி வாகன ஓட்டிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை,

இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராதுபாடுபட்டு இன்னுயிரை நீத்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந்தேதி, ஆண்டுதோறும் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அந்த வகையில், நேற்று தியாகிகள் தினத்தையொட்டி, நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நேற்று காலை 11 மணி முதல் 11.02 மணி வரை 2 நிமிடங்கள், சென்னையில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஒரே நேரத்தில் வாகன ஓட்டிகள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

2 நிமிடம் அஞ்சலி

அனைத்து வாகனங்களும் அப்படியே நின்றன. 2 நிமிடத்துக்கு பிறகு சிக்னல்கள் இயங்கியதும் வாகனங்கள் வழக்கம்போல் சென்றன.

அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை என அனைத்து சாலைகளிலும் உள்ள போக்குவரத்து சிக்னல்களும், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் நிறுத்தப்பட்டு, வாகன ஓட்டிகள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.


Next Story