62 அடியாக உயர்ந்த மருதாநதி அணை நீர்மட்டம்
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள மருதாநதி அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்தது.
திண்டுக்கல்
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 72 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 62 அடியாக உள்ளது. கடந்த சில தினங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக, நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாக்களை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் முதல் போக சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்யும் பட்சத்தில் அணை முழுகொள்ளளவான 72 அடியை எட்ட வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story