வந்தவாசி அருகே மருத மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


வந்தவாசி அருகே மருத மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

வந்தவாசி அருகே மருத மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் புகழ் பெற்ற மருத மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கோவில் வளாகத்தில் யாக சாலை அமைத்து கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் செய்யப்பட்ட பின்பு பூர்ணாஹுதி நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவில் மேலுள்ள கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

பின்னர் மூலவர் மருத மாரியம்மனுக்கு கலச நீரை ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. இதில் வந்தவாசி சுற்றியுள்ள கீழ்கொடுங்காலூர், மருதாடு உள்ளிட்ட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story