மருதங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்


மருதங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்
x

மருதங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்

மயிலாடுதுறை

நெல்மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மருதங்குடி நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க ே்வண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்மூட்டைகள் அடுக்கி வைப்பு

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட மருதங்குடி, ஆளஞ்சேரி, ஆதமங்கலம், பெருமங்கலம், புங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மின் மோட்டாரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்திருந்தனர். தற்போது சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்களை கடந்த இரண்டு வாரங்களாக அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் மருதங்குடி, ஆளஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கடந்த இரண்டு வாரங்களாக மருதங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்து காத்து கிடக்கின்றனர். ஆனால் இதுநாள் வரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவ்வப்போது மழை பெய்வதால் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக மருதங்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகள் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை உடனுக்குடன் கொள்முதல்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில்,

சீர்காழி தாலுகா மருதங்குடி ஊராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படவில்லை. இந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் என அதிகாரிகள் கூறியதன் பேரில் விவசாயிகள் கடந்த 20 நாட்களாக நெல் மூட்டைகளை கொண்டு வந்து அடுக்கி வைத்து இரவு பகலாக பாதுகாத்து வருகிறோம். ஆனால் இதுவரை நேரடி நெல் கொள்முதல் திறக்கப்படாததால் கவலை அடைந்து வருகிறோம். இதனால் கூடுதல் செலவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.


Next Story