மருவத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு 'சீல்'


மருவத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சீல்
x

மருவத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ‘சீல்’

திருவாரூர்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் அமைந்துள்ளன. இதில் பல்வேறு ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக ஊராட்சி மன்ற அலுவலகம் நிரந்தர கட்டிடம் இல்லாமல் இருந்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு மருவத்தூர் ஊராட்சிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து அதில் குடியேறி இருந்தார். ஆக்கிரமிப்பை அகற்றி கட்டிடத்தில் இருந்து வெளியே செல்லுமாறு அவரிடம் வலங்கைமான் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வலங்கைமான் தாசில்தார் (பொறுப்பு) ரஷ்யா பேகம் முன்னிலையில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி மருவத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக கதவை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது துணை தாசில்தார் ஆனந்த், வருவாய் சரக ஆய்வாளர் விக்னேஸ்வரன், மருவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் சித்திரை செல்வன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story