மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்நகர் தேசபந்துதிடலில் நடைபெற்ற மாநாடு மாவட்டத்தில் தொழில், விவசாயம், மருத்துவம், வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், தேனி வசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டினை மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தொடங்கி வைத்தார்.

தொழில் குறித்த அறிக்கையினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவாவும், விவசாயம் குறித்த அறிக்கையினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகனும் சமர்ப்பித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது வாழ்த்தி பேசினார். மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நகர செயலாளர் முருகன் வரவேற்றார். முடிவில் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துவேல் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story