மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குலசேகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
குலசேகரம்,
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரங்கள் மற்றும் இளம் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவங்களை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில பா.ஜனதா அரசையும், மத்திய பா.ஜனதா அரசையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குலசேகரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு குலசேகரம் வட்டாரத் தலைவர் விஸ்வம்பரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்தாஸ், தங்கமோகன், மாவட்டக்குழு உறுப்பினர் ரெஜீஸ் குமார், தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் நடராஜன், வட்டார குழு உறுப்பினர்கள் சவுந்தர்ராஜ், கணேசன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story