மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

ஆக்கூர் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொது சிவில் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிம்சன் ஆகியோர் கலந்து கொண்டு இந்திய மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் பொது சிவில் சட்டத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர்கள், மாதர் சங்கத்தினர் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story