மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரக்குறிச்சி ஊராட்சி, ஆலடிக்குமுளை ஊராட்சி ஆகியவற்றில் பொது மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பட்டுக்கோட்டை-தஞ்சை சாலையில் வீரக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு பொறுப்பாளர்கள் பெஞ்சமின், உலகநாதன், கிளை செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில், மழைக்காலங்களில் தெருக்களில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் நசுவினி ஆறு வரை கான்கிரீட் வாய்க்கால் அமைக்க வேண்டும். சுக்கிரன்பட்டி ஊரணி குளம் சுடுகாட்டு பாதையில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும். ஆலடிக்கு முளை ஊராட்சியில் வடிகால் பாசன வாய்க்கால்களை மராமத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story