மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை,

ஜி.எஸ்.டி.வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டுக்கோட்ைட, கும்பகோணம் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை

அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பட்டுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலமேகம் கலந்துகொண்டு பேசினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேராவூரணி

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பேராவூரணி பெரியார் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக சென்று தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வீரப்பெருமாள் தலைமை தாங்கினார். இதில் ஒன்றியக்குழு, நகரக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

கும்பகோணம்

கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாநகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றியக்குழு செயலாளர் ஜேசுதாஸ், மாநகராட்சி கவுன்சிலர் செல்வம் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

பாபநாசம்

பாபநாசம் தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

திருபுவனம்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story