மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை தியாகராஜநகர் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். விரிவாக்க பகுதிகளில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை தியாகராஜநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முத்துசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் வரகுணன், மாநிலக்குழு உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story