விருத்தாசலத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். வேல்முருகன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டமானது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், உணவு மற்றும் உரத்துக்கான மானியம், பிரதமர் கிசான் நிதி, பெட்ரோலிய மானியம் ஆகியவற்றுக்கான மானியங்களில் நிதி ஒதுக்கீடு குறைத்ததை கண்டித்தும், மருந்துகள் உள்பட உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையா, வட்ட செயலாளர் அசோகன், வழக்கறிஞர் சந்திரசேகரன், சுந்தரவடிவேல் செல்வகுமார், நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

1 More update

Next Story