மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் 4 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சி.ஐ.டி.யூ. சார்பில் தேனி மாவட்டத்தில், தேனி, கூடலூர், சின்னமனூர், வடுகப்பட்டி ஆகிய 4 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேனி தாலுகா செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் கோரிக்கையை விளக்கி பேசினார்.

மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டி, நாகராஜ், சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் மொக்கபாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.

வடுகப்பட்டியில் தாலுகா குழு உறுப்பினர் கணேசன் தலைமையிலும், சின்னமனூரில் ஏரியா செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, வேலை நேர திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.


Related Tags :
Next Story