மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்திய சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். மாவட்ட தீண்டாமை ஒழிப்பு துணை செயலாளர் நேதாஜி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சரோஜா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தனுஷ்கோடி, மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட இணை செயலாளர் பாரதிராஜா மற்றும் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story