மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
பேட்டை:
நெல்லை அருகே பேட்டை மல்லிமால் தெருவில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். புரட்சிகர இளைஞர் கழக மாநில தலைவர் சுந்தர்ராஜ் தொடக்க உரையாற்றினார். மாநில நிலைக்குழு உறுப்பினர் ரமேஷ், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த கணேசன், அன்புச்செல்வி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story