பொள்ளாச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பொள்ளாச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலுக்கு மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பொள்ளாச்சி தாலுகா குழு உறுப்பினர் ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் தாலுகா செயலாளர் அன்பரசன், ஆனைமலை தாலுகா செயலாளர் பரமசிவம், கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க துணை செயலாளர் மகாலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story