மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே மூவலூர்- சோழம்பேட்டை இடையே கும்பகோணம் சாலையையும், கல்லணை சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் கட்டுமான பணியின்போது கலவை மணலுக்கு பதிலாக சவுடு மண்ணை சிமெண்டுடன் கலந்து பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மாப்படுகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மேகநாதன் தலைமை தாங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், நபார்டு நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கல்லணை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.