மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம்
விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் நகராட்சியில் கடந்த நகராட்சி கூட்டத்தின் போது 24-வது வார்டு பகுதியில் டெண்டர் விடப்பட்ட கோப்புகள் காணவில்லை என புகார் கூறப்பட்டது. இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இது தொடர்பான வாசகங்கள் அடங்கிய போர்டு நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த போர்டு வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அது மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் முருகன் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த கூடினர். இதனை தொடர்ந்து போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது மாயமான போர்டை மீண்டும் நகராட்சி அலுவலகம் முன்பு வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தியதின் பேரில் அந்த போர்டு மீண்டும் நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.