மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி நகர் மற்றும் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவா, முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே பிரிவில் நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு, பல், கண், தீக்காய சிகிச்சைக்கு மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும். தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். சிகிச்சைக்கு வருபவர்களை உள்நோயாளிகளாக சேர்க்காமல் தட்டிக்கழிக்கும் போக்கை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் மாடசாமி, ஜெபஜோதி, அன்னலட்சுமி, சண்முகராஜ், பழனி, முத்துராஜ், கிருஷ்ணமூர்த்தி, பாண்டீஸ்வரன், சங்கரய்யா, மாரிச்சாமி, சுக்கிரவார்பட்டி பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story