மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூரில் வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவர் வீட்டுக்கு தீ வைத்த நபர்களை கண்டித்தும், அவர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய கோரியும், நெல்லை மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் கணேசன் முன்னிலை வகித்தனர். இதில் மாநில குழு உறுப்பினர் சங்கரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமணன், தமிழ்நாடு வண்ணார் பேரவை மாநில தலைவர் மணிபாபா, திராவிடர் தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story