உளுந்தூர்பேட்டை அருகே மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!


உளுந்தூர்பேட்டை அருகே மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!
x

உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டார் கோவில் பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீலோகாம்பிகை உடனுறை மாஷபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் பிரமோற்சவ தேரோட்டம் விழா நடைபெறும். அதுபோல இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று வெகு விமர்சியாக தேரோட்டம் நடைபெற்றது.

கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தேரோட்ட விழாவில் ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் மாஷபுரீஸ்வரர் லோகாம்பிகை இருவரும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தனர். அதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

இதில் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். தேரானது ஊரில் உள்ள 4 மாட வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு பணிகளுக்காக உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


Next Story